தமிழக மக்களின் வரி பணத்தில் இலவசம் என்கிற பெயரில் சுய விளம்பரம் செய்யப்படுவதாகவும், இதற்காக செலவழிக்கப்பட்ட தொகையில் 25 ஆயிரம் பள்ளிகளை திறந்திருக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
தமிழகத்தில் பா.ஜ.கவின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யவந்திருந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திருவாடனையில் நடந்த பிரச்சாரத்தில் பேசும்போது, திமுகவும் அதிமுகவும் இலவசங்களை கொடுத்து மாநிலத்தை அகல பாதாளத்திற்கு தள்ளிவிட்டார்கள். இலவசங்களுக்காக செலவிடப்பட்ட தொகையினை வைத்து 25 ஆயிரம் பள்ளிகளை கட்டி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கியிருக்க முடியும். ஆனால் அதை செய்யாமல் சுய விளம்பரத்துக்காக இப்படி காசையும் வீணடித்து மாநிலத்தையும் குட்டிச்சுவராக ஆக்கிவிட்டார்கள்.
அரசின் பெயரால் செய்யப்படும் ஒவ்வொரு சேவைகளுக்கும் முதலைமைச்சரின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். இது அவர்கள் என்ன தங்களுடைய சொந்தப்பணத்திலா செலவழித்தார்கள்? இதற்கெல்லாம் விடிவுகாலம் ஏற்பட வேண்டும் என பா.ஜ.க கருதுகிறது. பா.ஜ.க அளும் மற்ற மாநிலங்கள் நல்ல முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் இங்கே திராவிட கட்சிகள் வெரும் பேட்சளவில் தான் வளர்ச்சியை கூறுகிறார்களே தவிர செயல்வடிவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையை மாற்ற மக்கள் பா.ஜ.கவிற்கு வாக்களிக்க வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Write comments