Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 5, 2016

வாரணாசியில் பரபரப்பை ஏற்படுத்திய சிவசேனா பேனர்..!

furore in varanasi on shivsena protest

வாரணாசியில் சிவசேனா சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் வைக்கப்பட்ட‌ பேனரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் சிவசேனா சார்பில் ஒரு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. அதில் மோடியை இராமர் போலவும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃபை ராவணன் போல மார்ஃபிங் செய்து வெளியிட்டனர். அவர்கள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் விட்டுவைக்கவில்லை. கெஜ்ரிவாலை ராவணின் மகன் மேகனாதனாக மார்ஃபிங் செய்து பாகிஸ்தானின் ஏஜென்ட் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பாக சிவசேனா கட்சியின் நிர்வாகி அஜேய் சாபி கூறும்போது "இந்திய இராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலை சந்தேகத்துடன் கேட்டது மிகப்பெரும் மன வருதத்தை தருகிறது. நம் வீட்டிற்குள் யாராவது வந்து நம்மை தாக்கினால் நாம் அவர்களை திருப்பி தாக்குவோம். ஆனால் கெஜ்ரிவாலின் கேள்வி கேட்பது பாகிஸ்தான் உழவாளி போல் பேசுகிறார்.

இதே போன்று இன்னும் பல தாக்குதல்களை பாகிஸ்தான் மீது நடத்தி அவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்" என தெரிவித்தார். வாரணாசி தொகுதி பக்கம் இனி கெஜ்ரிவால் வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டுமென அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இப்போராட்டத்தின் போது பாகிஸ்தானிற்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic