Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 5, 2016

தோனியின் படத்தை அவரது கிராம மக்களே பார்க்கமாட்டார்கள்!

dhoni's own village people will not watch his movie

"தோனி" இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர். இவரை விரும்பாத கிரிக்கெட் ரசிகர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த வீரர்.

இந்திய அணி தோற்றுவிடும், இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்த பல போட்டிகளில் மகேந்திர சிங் தோனி தனது ஆட்டத்தால் வெற்றியை பெற்றுத்தந்திருக்கிறார். கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு உலக கோப்பை (20-2-, 50 ஓவர்)யை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். கடுமையான முயற்சிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற்ற தோனி குறுகிய காலகட்டத்தில் புகழின் உச்சிக்கே சென்றவர்.

அப்படிப்பட்ட தோனி தனது சுய சரிதையை திரைப்படமாக தயாரித்து வெளியிட்டிருக்கிறார். "தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி (தோனி - சொல்லப்படாத கதை) தற்போது வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் தோனியின் சொந்த கிராம மக்கள் யாராலும் இந்த திரைப்படத்தை பார்க்க முடியாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தோனியின் சொந்த கிராமம் லவாலி
உத்திரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசம் ஒன்றில்தான் தோனியின் சொந்த கிராமமான லவாலி உள்ளது. தோனியுடைய சித்தப்பா கணபதி இன்னமும் இந்த கிராமத்தில் தான் வசித்து வருகிறார். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் யாராலும் தோனியின் படத்தை பார்க்க முடியாது. காரணம் இதற்காக அவர்கள் 115 கி.மீ பயணிக்க வேண்டும். 

லவாலி கிராமத்திலிருந்து பஸ் ஏறச்செல்லவே ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டுமாம். பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் 110 கி.மீட்டர் பயணம் செய்து நைனிடால் மாவட்டத்தில் இருக்கும் ஹல்டவானி நகருக்குச்சென்றால் தான் திரையரங்கத்தையே அவர்களால் பார்க்க முடியும். இப்பேற்பட்ட கிராமத்திலிருந்து வந்த தோனி இன்று உலகம் அறியும் பிரபலமாக உயர்ந்து நிற்கிறார்.

விடா முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி என்பது எட்டாகனியல்ல என்பதற்கு தோனியும் ஓர் நல்ல உதாரணம்..!

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic