Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 10, 2016

ஹிலாரி கிளின்டனை ஜெயிலில் அடைப்பேன்...! - டிரம்ப்

trump says will send hillary to jail
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுகிற டொனால்டு டிரம்ப், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அவர் கடந்த 2005ஆம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர், பெண்களிடம் தான் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது எதையும் ஒருவர் செய்யலாம் என கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அவரது சொந்தக்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தலைவர்கள் பலரும் அவருக்கு அளித்துள்ள ஆதரவை திரும்பப் பெற்றதுடன், போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்திய அமெரிக்கர்கள் பலரும் தங்களது ஆதரவை ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு தெரிவித்துள்ளனர்.

மிசோரி மாநிலத்தின் செயிண்ட் லூயிஸ் நகரில் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள்  கலந்து கொண்ட விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த தேர்தலில் அதிபராகும் வாய்ப்பைப்பெற்றால், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனைச் சிறையில் அடைப்பேன் என்று கூறியிருக்கிறார். தனிப்பட்ட இணையக் காப்பகத்திலிருந்து இ-மெயில்களை அனுப்பியதற்காக ஹிலாரி மீது இந்த‌ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

அதை விசாரிக்க தனிப்பட்ட வழக்கறிஞரை நியமிப்பேன் என்றார் டிரம்ப். தேசிய பாதுகாப்புக்குத் ஹிலாரி பங்கம் விளைவித்துவிட்டதாக அவர் சாடினார். தமது செயல்களுக்காக ஹிலாரி வெட்கப்படவேண்டும் என்றார் அவர். இப்படி நாளொறு மேனியும் பொழுதொருவண்ணமாக சர்ச்சை பேச்சுக்களில் சிக்கி வரும் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் தனது செல்வாக்கை படிப்படியாக இழந்து கொண்டிருக்கிறார் என அமெரிக்க பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic