தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் எதிரொலியாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுலாப் பகுதிகள் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் இன்று உஷார்படுத்தப்பட்டனர்.
ஆக்ராவில், வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வந்து குவியும் தாஜ்மஹாலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாஜ்மஹாலின் வெளி வட்டப் பகுதியிலும், அனைத்து நுழைவு வாயில்களிலும் கூடுதலாக 36 கமாண்டோக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். துர்கா பூஜை, தசரா போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வருவதால், லக்னோ, ஆக்ரா, கான்பூர், மொராதாபாத், பரேலி, மீரட், முஸாஃபர்நகர், காசி, அலகாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Write comments