Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 16, 2016

நாட்டில் ஏழைகள் நிம்மதியாக தூங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு மக்கள் கடும் கண்டனம்...!


பிரதமர் மோடி சொன்னதற்கு மாறாக ஏழைகள் தூக்கமின்றி ஏடிஎம் மையத்தில் காத்துக் கிடப்பதாகவும், பணக்காரர்கள் வீட்டில் நிம்மதியாக தூங்குவதாகவும் டெல்லி மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பால் நாடு முழுவதும் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இரண்டு நாட்களாக ஏடிஎம் மையங்கள் இயங்காத நிலையில் இன்று ஒரு சில ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லியில் உள்ள பஜன்புரா, கிரேட்டர் கைலாஷ் உள்ளிட்ட இடங்களில் மக்கள் இரவு முழுவதும் காத்துக் கிடந்து பணம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் பணக்காரர்கள் நிம்மதியாக தூங்க இயலாது என்றும் ஏழைகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்ற பிரதமரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தங்களை போன்ற ஏழை மக்களே இரவு முழுவதும் ATM முன்பாக காத்துக் கிடப்பதாகவும், பணக்காரர்கள் நிம்மதியாக வீட்டில் உறங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic