சிறுநீரக கோளாறு காரணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சுஷ்மா ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் சிறுநீரக செயலிழப்பு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தற்போது டையாலசிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை நடந்து வருகிறது. கடவுள் என்னை ஆசீர்வதிப்பார்” என தெரிவித்துள்ளார்.


No comments:
Write comments