தீபாவளியன்று சிறப்புத் தள்ளுபடியில் மாட்டுக் கறி விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட சிங்கப்பூர் நிறுவனம் பின்னர் மன்னிப்பு கோரியது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது, சிங்கப்பூரில் 100 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வரும் பாரம்பரிய "கோல்டு ஸ்டோரேஜ்' பல்பொருள் விற்பனையகம், தீபாவளி தினத்தையொட்டி மாட்டுக் கறிக்கு 38 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்தது.
இது, ஹிந்துக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கோல்டு ஸ்டோரேஜ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நிறுவனத்தில் புதிதாகச் சேர்ந்த விற்பனைப் பிரதிநிதி ஒருவர், எங்களது ஒரே ஒரு விற்பனையகத்தில் மாட்டுக் கறி விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ஹிந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தும் நோக்கில் அந்த அறிவிப்பை வெளியிடவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். மத உணர்வைப் புரிந்து கொள்ளாமல் அவர் வெளியிட்ட அந்த அறிவிப்புக்கு, நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட்டது.

No comments:
Write comments