Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 3, 2016

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது தவறுதான்!

vaiko and vijaykanth
டந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது தவறுதான் என வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடந்தபோது மக்கள்  நலக்கூட்டணி சார்பில் யாரையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று  நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால்  தி.மு.க.விடம் கூட்டணி அமைக்காமல் எங்கள்  கூட்டணிக்கு விஜயகாந்த் வந்ததால் அவரை முதல்வர் வேட்பாளராக  அறிவித்தோம்.

மக்கள் நலக்கூட்டணி தனது முடிவில் இருந்து மாறியது தவறானதுதான். ஆனால் எந்த சூழ்நிலையில் விஜயகாந்தை நாங்கள் முதல்வர் வேட்பாள ராக அறிவித்தோம் என்பதை நீங்கள் சற்று  சிந்தித்து பார்க்க வேண்டும்.

மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்ததற்காக நாங்கள் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருந்தோம். கூட்டணி அமைப்பதற்காக விஜயகாந்த்  கேட்கும் தொகுதிகளை கொடுக்க தி.மு.க. தயாராக இருந்தது.

என்றாலும்   அவர் தி.மு.க.விடம் சேராமல் மக்கள் நலக்கூட்டணிக்கு வந்தார். அந்த ஒரு காரணத்துக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாக நாங்கள்  அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம்.

2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது ம.தி.மு.க.வில்   இருந்த எல்.கணேசன்,  செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் ஆகியோர் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க கூடாது என்றனர். அவர்களுக்கு கட்டுப்பட்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால் அவர்கள் மூவரும் பிறகு தி.மு.க.வுக்கு போய் விட்டனர். தி.மு.க.வுக்காக நான் 29 ஆண்டுகள் உழைத்தேன். ஆனால் என் மீது பழி சுமத்தி சதி குற்றச்சாட்டு கூறி கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள்.

ஆனால் ஆதரவாளர்கள் எனக்கு துணை நின்றனர். நாங்கள் ம.தி.மு.க.வை தொடங்கினோம். ஆனால் இன்றும் ம.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற ஒரே திட்டத்துடன் தி.மு.க செயல்படுகிறது.

அதற்காக நான் அ.தி.மு.க ஆதரவாளர் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. 2011ல் நாங்கள் ஜெயலலிதா வீட்டுக் கதவை தட்டவில்லை. தேர்தலில் போட்டியிடுவதையே தவிர்த்தோம். உடனே அவர் என் முடிவை மதிப்பதாக கடிதம் எழுதினார். அதுபோல் நான் பாதயாத்திரை சென்றபோது வழியில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த நட்பை நான் அரசியலுக்கு  பயன்படுத்தவில்லை. இவ்வாறு வைகோ கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic