Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 3, 2016

திப்பு ஜெயந்தி கொண்டாடவேண்டிய அவசியம் என்ன? - நீதிமன்றம் கேள்வி

high court raises questions on tippu jayanthi
திப்பு சுல்தான் ஜெயந்தியைக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? என்று கர்நாடக அரசுக்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

18ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னன் திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை கர்நாடக அரசு கடந்த ஆண்டு கொண்டாடியது. அப்போது குடகு பகுதியில் இருவேறு சமூகத்தினரிடையே மோதல் மூண்டு வன்முறையாக வெடித்தது.
இந்தச் சூழலில் இந்த ஆண்டும் திப்பு ஜெயந்தியை கொண்டாட மாநில அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து கே.பி.மஞ்சுநாதன் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனு, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுப்ரோ கமல் முகர்ஜி, நீதிபதி ஆர்.பி.புத்திலால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான எம்.ஆர்.நாயக் வாதிடுகையில், "திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர் என்பதால், அவரை நினைவுகூரும் வகையில் விழா நடத்துவதில் தவறில்லை' என்றார்.

இதையடுத்து வாதிட்ட மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் சஜன் பூவையா, "திப்பு சுல்தான் கொடுங்கோல் ஆட்சி புரிந்த மன்னன்; கொங்கணி, குடவர், கிறிஸ்தவர்கள் என பல்வேறு சமூகத்தினரை கொன்றழித்த திப்புவுக்கு எதற்கு விழா எடுக்க வேண்டும்?' என்று கேட்டார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது:
திப்பு ஜெயந்தியை மாநில அரசு கொண்டாடுவதன் அடிப்படைக் காரணம் என்ன? திப்பு சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல. ஒரு அரசர் என்ற முறையில் தனது எதிரியுடன் (வெள்ளையர்களுடன்) அவர் போரிட்டுள்ளார். ஒரு பகுதியின் அரசனாக மட்டுமே இருந்த ஒருவரது பிறந்த தினத்தை எந்தக் காரணத்தை முன்னிறுத்தி கொண்டாடுகிறது கர்நாடக அரசு? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டால் மதரீதியான மோதல்கள் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது. முன்னதாக ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் இந்தக் கொண்டாட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic