இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சென்ற வார முடிவில் 368.231 பில்லியன் டாலராக இருந்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்பு குறைந்ததால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.190 பில்லியன் டாலர் சரிந்து 367.18 பில்லியன் டாலராக உள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் பவுண்டு, யூரோ, யென் போன்ற இதர நாட்டு செலாவணிகள், தங்கம், எஸ்.டீ.ஆர்., பன்னாட்டு நிதியத்திடம் வைக்கப்பட்டுள்ள நிதி ஆகியவை இடம்பெற்றுள்ளன. அந்நியச் செலாவணி கையிருப்பு மதிப்பு, டாலரில் மறு மதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே, டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
தற்போதைய நிலையில், தங்க கையிருப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 20.460 பில்லியன் டாலராக உள்ளது. அதேபோல, இந்தியாவில் உள்ள வெளிநாட்டு நாணயச் சொத்துகளின் மதிப்பு 1.155 பில்லியன் டாலர் சரிந்து 342.772 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

No comments:
Write comments