Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 1, 2016

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த கமல்-கவுதமி ஜோடி பிரிவு!

நடிகர் கமல்ஹாசன் உடனான 13 ஆண்டுகால வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்த பிறகு கவுமதியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இருவரும் கணவன் மனைவி போலவே எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில் திடீரென கவுதமி, நடிகர் கமல்ஹாசன் உடனான 13 ஆண்டுகால வாழ்க்கை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். கமல் ஹாசனை பிரியும் முடிவில் எந்த அனுதாபமும் மற்றும் குற்றச்சாட்டையும் உருவாக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனுடன் 13 வருட வாழ்க்கைக்கு பிறகு இந்த பிரிவு எனக்கு நெஞ்சை உடைக்கும் சம்பவாக இருக்கிறது. எனக்கும், அவருக்கும் உள்ள வாழ்க்கை எண்ணங்கள் வேறுபடுவதால், இருவரும் அனுசரித்து போக வேண்டும் அல்லது அவரவர்கள் பாதையில் பயணிக்க வேண்டும். இதை நான் கடந்த இரண்டு வருடங்களாக யோசித்து வந்தேன். பின்னர் இந்த முடிவெடுத்தேன். எல்லாவற்றையும் தாண்டி நான் முதலில் ஒரு தாய், என் குழந்தைக்கு சிறந்த தாயாக இருப்பது எனது கடமை. நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு இருந்தே கமல்ஹாசனின் தீவிர ரசிகர். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. அதுவும் ஆடை வடிமைப்பாளராக அதிக அனுபவம் கிடைத்தது. கடந்த 29 வருடத்தில் அவருடைய அன்பும், அதரவு எனக்கு கிடைத்தது. என் வாழ்க்கை பயணத்தில் அவர் பல வழிகளாக இருந்தார், என்று மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவர் இடையே என்ன பிரச்சனை என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic