Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 1, 2016

குஷ்பு டீச்சர், திருநாவுக்கரசருக்கு பாடம் எடுக்க வேண்டும்! - பொன் ராதாகிருஷ்ணன்

kushboo should teach lesson on common civil codeமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசருக்கு, பொது சிவில் சட்டம் தொடர்பாக அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு பாடம் எடுக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பொது சிவில் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு, குஷ்பு பாடம் எடுத்தால் அவர் தெளிவு பெறுவார் என்று கூறினார்.

பொது சிவில் சட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள்  எழுந்துள்ள  நிலையில் காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய நடிகை குஷ்பு, பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. உடனடியாக, இது அவரது தனிப்பட்ட கருத்து என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பாக குஷ்பு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு பாடம் எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic