Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 1, 2016

யோகாவை கட்டாயமாக்க வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மனு

implement yoga compulsory in schools
நாடு முழுவதும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் யோகா பாடத்தை கட்டாயமாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீது உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை நடத்தவுள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞரும், டெல்லி மாநில பாஜக செய்தித் தொடர்பாளருமான அஸ்வினி குமார் உபாத்யா என்பவர் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

நாடு முழுவதும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் யோகாவை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், என்சிடிஇ, சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி போன்றவற்றுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். தேசிய யோகா கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும்.

மேலும், யோகா குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையை சுகாதார தினமாக அனுசரிப்பதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று அஸ்வினி குமார் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதிகள் டி.ஒய். சந்திராசூட், எல். நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு பரிசீலிக்கப்பட்டது. அப்போது அந்த மனு மீது அடுத்த மாதம் 7-ஆம் தேதி விசாரணை நடத்த நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic