Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 1, 2016

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக குவைத்தில் கையெழுத்து பிரச்சாரம்!

ந்திய அரசு கொண்டு நடைமுறைப்படுத்த நினைக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) மற்றும் அனைத்து குவைத் தமிழ் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குவைத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்திய அரசியமைப்பு சட்டத்தின் 25ம் பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் தங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றவும், நடைமுறைப்படுத்தவும், பரப்பவும் உரிமை அளித்துள்ளது. இந்த உரிமையின் அடிப்படையில் இந்தியாவில் வாழும் பல்வேறு மதத்தினர் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை முதலியவற்றில் தங்களது தனியார் சட்டங்களை பின்பற்றி வருகின்றனர்.

ஆனால், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜக நீண்ட காலமாக அடுத்தவர்கள் மூக்கில் கைவைக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த துடித்து வருகிறது. ஏற்கனவே தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வியை காவிமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்வதறியாது பாஜக அரசு திகைத்து வருகிறது.

பொது சிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மோடியின் பாஜக அரசை கண்டித்தும், உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட ரீதியாக உணர்த்துவதற்கும், உலகெங்கும் வாழும் இந்தியர்களிடம் கையெழுத்து வாங்கும் பணி நடைபெற்று வருகின்றது

அந்த வகையில் குவைத் வாழ் இந்திய மக்களிடம் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் உள்ளிட்ட குவைத் தமிழ் இஸ்லாமிய கூட்டமைப்பினர் கையெழுத்து வாங்கும் பணியை தீவிரமாக செய்தனர்.

ஃகைத்தான் கே-டிக் (K-Tic) தமிழ் பள்ளிவாசல், குவைத் சிட்டி, மிர்காப், மாலியா, ஃபஹாஹீல், சால்மியா, ஹவல்லி, அப்பாஸியா, அதான், மங்காஃப், ஃபர்வானிய்யா, தோஹா உள்ளிட்ட குவைத் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக மக்கள் மட்டுமல்லாது இந்திய மக்கள் அனைவரிடமும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தீவிர கையெழுத்து வேட்டையை நடத்தினர்.

கையைழுத்திடப்பட்ட ஆயிரக்கணக்கான படிவங்கள் குவைத் தமிழ் இஸ்லாமிய கூட்டமைப்பின் வாயிலாக இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

- கலீல்
வலைகுடாவிலிருந்து

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic