போபால் மத்திய சிறைச் சாலையில் இருந்து தப்பிச் சென்ற 8 சிமி தீவிரவாதிகளை என்கவுன்ட்டரில் கொன்ற போலீஸாருக்கு தலா ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ம.பி. அரசு அறிவித்திருந்தது.
அதேசமயம், போலீஸார் திட்டமிட்டு இந்த என்கவுன்ட்டரை நடத்தியதாக எதிர்க்கட்சிகளும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் சந்தேகம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து இந்த என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.பாண்டே தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் அறிவித்தார்.
இதனால் விசாரணை முடியும் வரையில் போலீஸாருக்காக அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் சன்மானத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அம்மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘நீதி விசாரணைக்கு முன்பாக இந்த சன்மானம் அறிவிக்கப்பட்டது. தற்போது நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதால் சன்மானம் வழங்க முடியாது. இதன் காரணமாகவே சன்மானத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
No comments:
Write comments