யாழ்பாணம் - ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி அமெரிக்காவின் அதிபராக வேண்டும் என்பதற்காக வரும் நவம்பர் 8-ஆம் தேதி 1000 தேங்காய்களை உடைத்து இலங்கைத் தமிழர்கள் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது.
யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற கந்தசாமி கோயிலில் இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள், ஹிலாரி வெற்றி பெற வேண்டி 1000 தேங்காய்களை உடைத்தும், 1008 மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து பிரார்த்தனையில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் கூறியதாவது "வருகின்ற நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெற வேண்டி 1000 தேங்காய் உடைக்கப்படவுள்ளன. இலங்கைத் தமிழர்களாகிய நாங்கள் ஹிலாரியின் வெற்றியை எதிர்பார்க்கிறோம். ஹிலாரியின் வெற்றி இலங்கையில் சிறுப்பான்மையினராக உள்ள தமிழ் மக்களுக்கு மிக முக்கியமானது. இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சனைகளுக்கு அமெரிக்காவின் தலையீடு முக்கியம்" என்று கூறினார்.

No comments:
Write comments