எளிய மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஜீரோ பாலன்ஸ் உடன் ஜன்தன் வங்கிக் கணக்கை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இதையடுத்து, கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கடந்த மாதம் 8-ஆம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் தங்களிடம் உள்ள பழைய 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் தங்களுடைய பணத்தை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.
ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளிலும் மக்கள் தங்களுடைய பணத்தை மாற்றி வருகின்றனர். இதைப்பயன்படுத்தி, ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் பணமுதலைகள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறார்கள் என்ற புகார் எழுந்ததுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
எனவே, ஒரேநேரத்தில் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்ட நிலையில், அதை எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி வரை ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ.74,610 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், அதிக பண டெபாசிட் செய்யப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. இரண்டாவதாக மேற்கு வங்கம் இடம்பிடித்துள்ளது. அதாவது உத்தரபிரதேஷத்தில் செயல்பட்டு வரும் 3.8 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில் ரூ.12,021 கோடி பண டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 2.44 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில் ரூ.9,193 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் செயல்பட்டு வரும் 1.9 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ. 6,291 கோடி பண டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பீகாரில் செயல்பட்டு வரும் 2.62 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.6,160. கோடி பண டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் தமழிகம் பற்றி குறிப்பிடப்படவில்லை. இவை அனைத்தும் எளிய மக்களின் வருவாய் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments