வர்தா புயல் காரணமாக, தமிழகத்தில் ரூ.6,750 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக கூட்டமைப்பான அசோசேம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் வர்தா புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் மட்டும் .6,750 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் சேதமடைந்துள்ளன. ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஃபோர்டு, ஹூண்டாய், ஹோண்டா நிஸான், பி.எம்.டபிள்யூ, அசோக் லேலண்ட் போன்ற பல முக்கிய நிறுவனங்களில் உற்பத்தி தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த திங்கட்கிழமை மட்டுமே ரூ. 1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 600 க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சென்னையின் முக்கிய வணிக நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டிருந்தன. இதனால் ரூ.6,750 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னையில் இயல்பு நிலை திரும்பியபோதும் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் சிறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்படும்’ என்று வர்த்தக கூட்டமைப்பான அசோசேமின் பொதுச்செயலாளர் டி.எஸ்.ராவத் கூறியுள்ளார்.

No comments:
Write comments