Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Dec 26, 2016

ஓ.பி.எஸ். மௌனம் ஏன்? ஜி.ரா கேள்வி


தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனை குறித்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மௌனம் சாதிப்பது ஏன் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 21-ஆம் தேதி தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன்ராவ் வீட்டிலும், அவரது அலுவலகமான தலைமைச் செயலக அறையிலும், அவரது மகன் விவேக் வீட்டிலும், விவேக்கிற்கு சொந்தமான விர்து என்ற நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதனையடுத்து ராம மோகன்ராவும், அவரது மகனும் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென்று கடந்த வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பப்ட்டது. இந்நிலையில் ராம மோகன்ராவ் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனை குறித்து தமிழக முதலமைச்சர் விளக்கமளிக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்? என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
தலைமைச் செயலகத்திலும், தலைமைச் செயலர் அறையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏன்? இன்னும் மௌனம் காக்கிறார். அவர் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic