Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Dec 26, 2016

தீபா ஆதரவு அதிமுகவினர்:பின்னணி!


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதாவை அரசியலில் அறிமுகம் செய்துவைத்து மறைந்தார். ஜெயலலிதா அரசியலில் கால் ஊன்ற, கட்சியை கைப்பற்ற, சந்தித்த போரட்டங்கள் ஏராளம், எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அப்பல்லோ மருத்துமனைக்குள் அவரை நுழைய விடாமல் தடுத்தது துவங்கி, எம்.ஜி.ஆர் இறுதி நிகழ்வு வரை அவர் சந்தித்த அவமானங்கள் பல என்பதை எவரும் மறுக்க முடியாது. அந்த அவமானங்களில் இருந்து உருவான ஜெயலலிதா அதிமுகவை ஒன்றுபடுத்தி வென்று காட்டினார். மரணிக்கும் போது கூட அவர் முதல்வராக இருந்து மறைய அந்த போராட்டங்களும் ஒரு காரணம்.
ஆனால் அவர் மறைவுக்குப் பின்னர் வி.கே. சசிகலா கட்சியின் பொதுச்செயலாளர் ஆக இருக்கிறார். அதற்காக அதிமுக பொதுக்குழு நிர்வாகிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக-வினர் தீபாவை வரவேற்று போஸ்டர் ஒட்டி, சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சசிகலாவுக்கு எதிராக தீபா களம் இறங்குவதும், அதற்கு தீபா அழைப்பு விடுக்காமலே அதிமுகவினர் சொந்த செலவில் பிளெக்ஸ் , போஸ்டர் வைத்து கலக்குவது பற்றியும், அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம் “ மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும், பதவிகளை தக்க வைத்துக்கொள்ள, அடிமட்ட நிர்வாகிகளிடம் நெருக்கம் காட்டாமல், மேலிடத்தில் நெருக்கம் வைத்துக்கொண்டு, அளவுக்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள், அடிமட்டத் தொண்டனை அலட்சிய படுத்தி அதிகமான வெறுப்புகளை உருவாகி கொண்டார்கள், அந்த வெறுப்பை எதிர்ப்பாக காட்டத்தான், சசிகலாவுக்கு எதிராக, தீபாவுக்கு ஆதராவாக களம் இறங்கியுள்ளார்கள். மற்றபடி எந்த பின்னனியும் இல்லை” என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic