Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Dec 22, 2016

ராகுலுடன் நவ்ஜோத்சிங் சித்து சந்திப்பு!


பாஜக முன்னாள் எம்.பி., நவ்ஜோத்சிங் சித்து, காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராகுல்காந்தியை நேற்று (20/12/2016) சந்தித்துப் பேசினார்.
பாஜக தலைமைக்கும் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், நவ்ஜோத்சிங் சித்து அண்மையில், பாஜக-விலிருந்து விலகினார். இந்நிலையில் சித்து, காங்கிரஸில் இணையலாம் என்று தகவல்கள் கசிந்தநிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாஜக எம்.பி.,யாக இருந்த சித்து, கட்சியிலிருந்து விலகி ஆவாஸ்-ஏ-பஞ்சாப் என்ற அமைப்பைத் தொடங்கினார். பஞ்சாப் மாநிலத்தின் நலனுக்காக செயல்படப்போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், அவரது மனைவி நவ்ஜோத் கௌர் அண்மையில், காங்கிரஸில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, சித்துவும் அக்கட்சியில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இதை உறுதிப்படுத்தும்வகையில், ராகுல் காந்தியை சித்து செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியிருப்பதாக தெரியவருகிறது. இந்தச் சந்திப்பு சுமார் 3௦ நிமிடங்கள் நடந்தன. இந்தச் சந்திப்பில், எதுகுறித்து உரையாடப்பட்டது என்று அதிகாரபூர்வ அறிவிப்பை இரு தரப்பும் வெளியிடவில்லை

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic