கடந்த 2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.6 சதவிகிதமாக இருந்துள்ளதாக மோதிலால் ஓஸ்வால் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. கடந்த நவம்பர் மாதம் இந்திய பொருளாதாரம் 5.6 சதவிகிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் 2016-17 நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் இந்திய பொருளாதாரம் 6.5 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனால் கடந்த 2015-16 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கடந்த அக்டோபர் மாதத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதமாக காணப்பட்டது. ஆனால் நவம்பர் மாதத்தில் 5.6 சதவிகிதமாக இருந்தது. முந்தைய 2015ஆம் ஆண்டில் இது 6 சதவிகிதமாக இருந்தது என்று மோதிலால் ஓஸ்வால் செக்யூரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments:
Write comments