Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 25, 2017

இந்தியா உங்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் : தமிழர்களை போற்றிப் புகழும் கட்ஜூ!


இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் உங்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் முன்னெடுத்த போராட்டம் உங்களது வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்கும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எப்போதும் ஆதரவு தருபவர் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜூ.

முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தபோதும் கூட, ”இந்த பிரச்சனையை நான் தீர்க்கிறேன். உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே தடை விதித்துள்ளது. அதனால் நீங்கள் ஜல்லிக்கட்டு என்ற பெயரை மாற்றி பொங்கல் விளையாட்டு என்ற பெயரில் கொண்டாடுங்கள். பொங்கல் விளையாட்டுக்கு எந்த வித தடையும் இல்லை” என்றார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும் தமிழகம் எங்கும் தொடர் போராட்டம் நடைபெற்றது.

அதற்கும் கட்ஜூ ஆதரவு தெரிவித்து இருந்தார். தான் அலஹாபாத் பல்கலைகத்தில் பி.ஏ. படித்தபொழுது, தமிழ் டிப்ளமோ கோர்ஸில் இணைந்து படித்ததாகவும், அப்போது தன்னுடைய புத்தகத்தின் முதல் வார்த்தையே ‘தமிழர் வீரம்’ என்று இருந்ததாகவும் நினைவு கூர்ந்து இருந்தார்.

மேலும், இன்னொரு பதிவில் ”தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா…” என்று பதிவிட்டுள்ளார். இது போன்று தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்ஜூ ஆதரவு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், திங்கட்கிழமை மாநில சட்டசபை அவசர கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் கொண்டு வரப்பட்டு அது ஒருமனதாக நிறைவேறியது. அதற்கு மார்கண்டேய கட்ஜூ மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள கட்ஜூ, “ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னெடுத்து சென்ற தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.

இந்த போராட்டத்தின் முக்கியத்துவமானது, மிகப்பெரிய இயக்கமாக, அத்தனை பிரச்சினைகளும் இருந்தப்போதிலும், நீங்கள் ஜாதி, மதம் போன்ற எல்லைகளை கடந்து, அச்சமற்று மற்றும் உறுதியான நின்றீர்கள். மேலும், போராட்டத்தின் வாயிலாக இறுதி வெற்றியை அடைந்து உள்ளீர்கள்.

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் உங்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் முன்னெடுத்த போராட்டம் உங்களது வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்கும்.

தமிழ் மக்கள் வாழ்க” என்று வாழ்த்தியிருக்கிறார்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic