Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 25, 2017

கர்ப்பிணி பெண் வயிற்றில் போலீஸ் உதை, என்னை அரசியலுக்கு வரவைக்காதீர்கள்: கமல் காட்டம்


மாணவர்கள் அமைதியாக போராடிய நிலையிலும், அவர்களை போலீஸ் அடித்து விரட்டியதும், கர்ப்பிணி பெண் வயிற்றில் போலீஸ் உதைத்ததும், சர்வேதச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவலர்களே தீ வைத்ததும், வீடு புகுந்து அடித்ததும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதில் கமலஹாசனும் மிகவும் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்.

கமலஹாசன் இரண்டு நாட்களாக தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கமலுடன் ராஜா, சுப்ரமணியம் ஸ்வாமி உட்பட அனைவரும் பதில் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள்.

அது குறித்து மீண்டும் பொங்கினார் கமலஹாசன். நான் உண்டு என் வேலை உண்டு என்று இருக்கிறேன்.

ஒரு தமிழனாக, வாக்குரிமை உள்ள சரியாக வரி செலுத்தும் இந்தியனாக எனது கடமையைச் செய்கிறேன்.

நடக்கும் அராஜகங்களை நாடு பார்த்துக் கொண்டிருப்பதை மறக்காதீர்கள். என்னையும் அரசியலுக்கு வரவைத்து விடாதீர்கள் என்கிறார் மிக காட்டமாக.

இதற்கு இணையதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சகாயம் வராத பட்சத்தில், கமல் சரியான சாய்ஸ் தான் என்றும் கருத்துகள் எழுகிறது.

ஆனால், இவ்வாறு தலைமை குறித்த தள்ளாடலில் தமிழகம் இருக்க கூடாது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. காரணம் தலைமைக்கு யார் பொறுத்தமானவர்கள் என்று முதலில் முடிவு செய்யப்படுகிறாரோ அவரே முதலும், கடைசியுமான தலைமையில் இருக்க வேண்டும், அதாவது அடுத்த தலைமைக்கான தகுதி அடுத்த இளைஞனுக்கு வரும் வரை.

அவ்வாறான தேர்வுதான் நிலைத்த நன்மை தரக்கூடியதாக இருக்கும். இவர் இல்லையென்றால், அவர் என்ற தடுமாற்ற நிலை இருக்கவே கூடாது. அந்த தடுமாற்றத்தில் நாம் மட்டுமல்ல நாடும் தடுமாற்றத்தில் உள்ளது என்ற அர்த்தமாகிறது. உறுதியான முடிவுகளே சரியான பாதையில் இட்டுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic