ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அவசர சட்டம் இயற்றுமாறு தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவிற்கு பிரதமர் நரேந்தி மோடி ஆணை பிரப்பித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை மாவட்ட பா.ஜ.கவின் வர்த்தகர் அணி சார்பில் நன்றி அறிவிப்பு சுவரொட்டி நகரமெங்கும் ஒட்டப்பட்டது. "தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கும் நன்றி" என அச்சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்தது.
இந்த சுவரொட்டியின் மீது சில மர்ம நபர்கள் சாணி அடித்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


No comments:
Write comments