Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 27, 2017

10 ரூபாய் நாணயங்கள் எப்படி இருந்தாலும் செல்லபடியாகும் - ரிசர்வ் வங்கி..

தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவித்துள்ளது.

டெல்லி: பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 10 ரூபாய் நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. அவை பல்வேறு வடிவங்களில் இருப்பதால் போலி நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாக ஒருவித அச்சம் பரவியது. இது குறித்து பலமுறை ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 10 ரூபாய் நாணயங்கள் பழையது, புதியது என எந்த வடிவத்தில் இருந்தாலும் செல்லும் என்று மீண்டும் அறிவித்துள்ளது.









Image result for 10 RS INDIAN COIN PHOTOS
இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளைவிட நாணயங்கள் நீண்ட காலத்திற்குப் புழக்கத்திலிருக்கும் என்பதால் ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவை வெளியிடப்படுகின்றன. கடந்த 2010 ஜூலை 15 ஆம் தேதி புதிதாக ரூபாய் சின்னம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் அந்த குறியீட்டுடன் தயாரிக்கப்பட்டன. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலிருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகும். மேலும் இத்தகைய நாணயங்கள் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.

எனவே பொதுமக்கள் இதுகுறித்து வரும் வதந்திகளை புறக்கணித்து, 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பெட்டிக்கடைகள், சிறு வியாபாரிகள் தான் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுத்து வருகின்றனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி அதிக அளவில் பத்து ரூபாய் நாணயங்களை மக்களுக்கு வழங்கியது. இப்போது அவற்றை செலவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருவதால் மீண்டும் மீண்டும் ரிசர்வ் வங்கி மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறது.

சிட்டி







No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic