சூர்யா நடிப்பில் வருகிற ஜன26ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட 'சிங்கம் 3' திரைப்படம் 3 வது முறையாக தள்ளிப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், சிங்கம் 3 படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க படக்குழு முடிவேடுதுதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
முன்னதாக இப்படம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து டிசம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டு காரணத்தால் 'சிங்கம் 3' மூன்றாவது முறையாக தள்ளிப்போகிறது.
இந்நிலையில், ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள 'சி 3' படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என தகவலும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றன. எனினும், சிங்கம் 3 வெளியீடு குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
No comments:
Write comments