ஈரோடு அருகே உள்ள வீரப்பம்பாளையம் என்ற இடத்தில் பா.ஜ.க.சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரான வானதி சீனிவாசன் இன்று ஈரோடு வந்தார்.
தனியார் தோட்டம் ஒன்றில் ஜல்லிக்கட்டு ஏற்பாடு நடைபெற்றது. போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றி பா.ஜ.க. கொடிகள் ப்ளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர். கிராம மக்கள் சுமார் 100 பேர் அங்கு கூடியிருந்தனர். வானதி சீனிவாசன் வந்து பேசி ஜல்லிக்கட்டு தொடங்குவதாக அறிவித்தார். தொடர்ந்து நான்கைந்து காளைகள் மைதானத்தில் ஓடியது. பா.ஜ.க.சார்பில் ஜல்லிக்கட்டு நடப்பதை ஈரோட்டில் போராடி வரும் மாணவர்கள் கவனத்திற்கு போக கொந்தளித்துப் போன மாணவர்கள் வாகனங்களில் சாரி சாரியாக வேகமாக சென்றனர். மாணவர்கள் கடும் கோபத்துடன் வரும் தகவல் கேள்விப்பட்ட வானதி உடனே அவ்விடத்தை விட்டு காரில் ஏறி வேகமாக சென்று விட்டார்.
மைதானம் வந்த மாணவர்கள் ஜல்லிக்கட்டை உடனே நிறுத்தியதுடன் எதற்காக பா.ஜ.க. கொடிகளை இங்கு கட்டி வைத்துள்ளீர்கள் என்ன அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறீர்களா? என அங்கிருந்த உள்ளுர் பாஜ.க.வினரிடம் ஆவேசத்துடன் கேள்வி கேட்டதுடன் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் தமிழ் பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என இரவு பகலாக சோறு தண்ணீர் பற்றி கவலைப்படாமல் மழை, வெய்யில் குளிர் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு உங்கள் பிள்ளைகள் நாங்கள் ஒரு வாரமாக போராடி வரும் போது இது போன்ற அரசியல் பச்சோந்திகள் எங்களின் போராட்டத்தை திசை திருப்ப இப்படிப்பட்ட அரசியல் கேவலத்தை அரங்கேற்றுகிறார்கள் .
ஊர் ஊராக உலகம் முழுக்க சுற்றும் மோடி ஒரே இரவில் ரூபாய் நோட்டு செல்லாது என அப்பாவி மக்களை ஏ.டி.எம்.வாசலில் நிக்க வைத்து சாகடித்த மோடி ஏன் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அமைச்சரவையை கூட்டி நிரந்தரமான தீர்வு இனிமேல் ஜல்லிக்கட்டிற்கு இந்தியாவில் தடை இல்லை என அறிவிக்க முடியாதா? தமிழர்கள் என்றால் கேவலமாகப் பார்க்கும் மோடியின் பா.ஜ.க.கும்பல் தான் இவர்கள். இவர்களையெல்லாம் மக்கள் நீங்கள் சும்மா விடலாமா? என ஆவேசமாக மாணவர்கள் மக்களைப் பார்த்து கேட்க பொங்கி எழுந்த பொதுமக்கள் மாணவர்களுடன் சேர்ந்து அங்கிருந்த பா.ஜ.க. கொடிகள் ப்ளக்ஸ் பேனர்களை கிழித்து துவைத்து தீ வைத்து எரிந்தனர். மாணவர்களின் ஆவேச தாக்குதல் எஞ்சியிருந்த ஒன்றிரண்டு பா.ஜ.க.வினரும் விட்டால் போதும் என அவ்விடத்தை விட்டு வேகமாக சென்று விட்டனர். மாணவர்களின் ஆவேசம், பொது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தடையை முழுமையாக உடைக்கும் வரை பா.ஜ.க. எங்காவது அரசியல் ஆதாயம் தேட நினைத்தால் எல்லா இடங்களிலும் ஓட ஓட விரட்டுவோம் என்றார்கள் ஈரோட்டு மாணவர்கள்.
- ஜீவாதங்கவேல்

No comments:
Write comments