தற்போதுள்ள சூழ் நிலையில் தமிழக முதல்வர் மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான நட்ராஜ் ஐ.பி.எஸ் ஐ முதல்வராக அதிமுக சட்ட மன்ற உறிப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் முக நூல் பக்கத்தில் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி மற்று ஓ. பன்னீர் செல்வம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேர்மையான காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், எம்.எல்.ஏவாக சிறப்பாக செயல்பட்டு வருபவருமான நட்ராஜை முதலமைச்சராக்குவது குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சசிகலாவுக்கோ அல்லது பன்னீர் செல்வத்திற்கோ ஆதரவு தெரிவிக்காமல் நடு நிலையாக செயல்படும் நட்ராஜை முதல்வராக்கினால் அதை இருதரப்பினருமே ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படும் என்று கட்ஜு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மைலாப்பூர் தொகுதி எம்.எல். ஏ நட்ராஜ் ஐ.பி.எஸ் அதிகாரியாகவும் சென்னை கமிஷனராகவும் பதவி வகித்தவர். மறைந்த ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றவர். இதன் காரணமாக அவருக்கு டி.என்.பி.எஸ்.சி தலைவர் பொறுப்பும் அளிக்கப்பட்டது. அவர் தலைவராக இருந்தபோது எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளிலும் சிக்கவில்லை. அதுமட்டுமின்றி டி.என்.பி.எஸ்.சி மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கி பலருக்கு எந்தவித செலவின்றி பணி நியமனம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments