சென்னை: எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடுவே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடப்பாடி பழனிச்சாமியை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வர் வேட்பாளராக அறிவித்தார். இதையடுத்து ஆட்சியமைக்க தயாராகி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி எளிதில் வென்று ஆட்சியமைத்துவிடும் சூழல்தான் இப்போது உள்ளது.
இது பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாக்கிவிடும் என கூறப்படுகிறது. எனவே பன்னீர் சற்று இறங்கி வந்து தனது நண்பரான எடப்பாடி பழனிச்சாமியோடு கை கோர்க்க திட்டமிட்டுள்ளாராம். மேலும், பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஈடுபட்டுள்ளாராம்.
கூவத்தூர் ரிசார்ட்டிலிருந்தபடி ஓ.பி.எஸ்சை தொடர்பு கொண்ட தினகரன், பன்னீர்செல்வத்தை இணைந்து செயல்பட அழைப்புவிடுத்துள்ளார். சசிகலா சிறையில் உள்ள சூழலில் தினகரனுடன் இணைந்து செயல்பட அவரின் நீண்ட கால நண்பரான ஓ.பி.எஸ்சுக்கும் சம்மதம்தானாம். இந்த ஆட்சி இன்னும் 4 வருடங்கள் உள்ள நிலையில் இப்போதே ஏன் ஆட்சி கவிழ்ப்புக்கு ஆளாக வேண்டும் என்பதே ஓ.பி.எஸ் உட்பட அனைத்து அதிமுகவினரின் எண்ணமும் ஆகும்.
ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடந்தால் உடைபட்ட அதிமுகவை திமுக எளிதில் வெல்லும் என்ற அச்சமும் ஓ.பி.எஸ் தரப்புக்கு உள்ளது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க ஓ.பி.எஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. இதை இறுதி செய்ய இன்று ஓ.பி.எஸ் வீட்டில் ஆலோசனை நடைபெறுகிறது. சசிகலா முதல்வராக அமர்வதற்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமி அந்த இருக்கையில் அமர்ந்துவிட்டு போகட்டுமே என ஓ.பி.எஸ் இறங்கி வர தயாராகிவிட்டாராம். இதனால் தமிழக அரசியலில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சிட்டி

No comments:
Write comments