Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Feb 18, 2017

சட்டசபையில் கடும் அமளி!

தமிழக சட்டசபையில் இன்று கடும் அமளி நிலவியது. இந்த அமளிக்கு இடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

சென்னை: சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. திமுக, ஓபிஎஸ் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் சசி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது.

சட்டசபை இன்று காலை கூடியதும் சபாநாயகர், சபை கூடியதற்கான காரணங்களை தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு சசி தரப்பு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் திமுக, ஓபிஎஸ் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதற்கு எதிராக சசி தரப்பு எம்.எல்.ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்களைத் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனாலும் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு இடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். 

சிட்டி

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic