ஐஎஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது தாங்கள் செய்யும் பயிற்சிகள் மற்றும் அடுத்து எந்த நாட்டை குறிவைக்கப்போகிறோம் என்பது குறித்து வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்கள்.
இந்நிலையில் இரண்டு சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தற்கொலை தாக்குதலுக்கு உட்படுத்தியுள்ளனர். அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
அதில் இரண்டு சிறுவர்கள் முதலில் பயிற்சி செய்கிறார்கள், அதன் பின் கார் ஓட்டியும் பயிற்சி செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து ஒரு சிறுவன் இராக்கின் சிஞ்சார் பகுதியில் இருந்து பயங்கர வெடிபொருட்கள் நிரம்பிய வாகனத்தை தங்களுடைய எதிரிகள் இருக்கும் தெருவிற்கு ஓட்டிச் செல்கின்றான். அங்கு சென்றவுடன் கார் வெடித்துச் சிதறுகிறது. இதில் அச்சிறுவன் இறக்கிறான்.
இதே போன்று மற்றொரு சிறுவனும் அதே பகுதியில் உள்ள மற்றொரு தெருவில் காரை ஓட்டிச் செல்கிறான். குறித்த இடத்தைச் சென்றவுடன் கார் வெடிக்கிறது.
ஐஎஸ் தீவிரவாதிகள் சிறுவர்கள் தற்கொலை தாக்குதலுக்கு உட்படுத்துவது இது ஒன்றும் முதல் முறை இல்லை என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் பாக்தாதின் கிர்குக் பகுதியில் சிறுவன் ஒருவனை அவர்கள் தற்கொலை படை தாக்குதலுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
No comments:
Write comments