இந்தோனேசியா நாட்டில் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு இஸ்லாமிய சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இச்சட்டப்படி திருமணம் ஆன ஒரு பெண் தனது கணவரை தவிர வேறு நபருடன் உறவு கொண்டால் அது பெறும் குற்றமாக கருதப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் திருமணமான பெண் ஒருவர் வேறு ஒரு நபருடன் உறவு வைத்துக்கொண்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டார். அவருக்கு 26 சாட்டை அடிகள் தண்டனையாக வழங்கப்பட்டது. அந்த பெண்மனீ மசூதி ஒன்றின் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார். பிறகு முழங்காலிட்டு உட்கார வைக்கப்பட்ட பிறகு காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்மணிக்கு சாட்டை அடி கொடுத்தனர்.
அவருடன் உறவு வைத்திருந்ததாக சொல்லப்பட்ட நபருக்கும் இதே போன்று தண்டனை வழங்கப்பட்டது. ஏராளமான மக்கள் முன்னிலையில் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
No comments:
Write comments