புனே அணி பென் ஸ்டோக்சை ரூ.14.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. காலை 10 மணி வரையிலான நிலவரப்படி பென் ஸ்டோக்ஸ்தான் அதிக விலைக்கு ஏலம் போன வீரராகும்.
பெங்களூர்: 10வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 43 வெளிநாட்டினர் உள்பட 139 வீரர்கள் 8 அணிகளால் தக்க வைக்கப்பட்டனர். எனவே, 130 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 357 வீரர்கள் இந்த முறை ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று தெரிவித்தது.
இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூரிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் மேட்லி வீரர்களுக்கான ஏலத்தை நடத்துகிறார்.
இங்கிலாந்து 20 ஓவர் அணியின் கேப்டன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், இலங்கை கேப்டன் மேத்யூஸ், ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், மிட்செல் ஜான்சன், இந்தியாவின் இஷாந்த் ஷர்மா ஆகியோரின் அடிப்படை விலை அதிகபட்சமாக ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.2 கோடியில் இருந்து இவர்களின் விலை தொடங்கும்.
ஒவ்வொரு அணியும் தலா ரூ.66 கோடி வரை செலவு செய்ய முடியும். தக்க வைத்துள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போக மீதி தொகையை கொண்டு ஏலத்தில் செலவு செய்யலாம். அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.23.65 கோடி இருப்பு வைத்துள்ளது.
ஏலம் தொடங்கியதும் முதல் வீரராக நியூசிலாந்தின் மார்டின் கப்தில் ஏலத்தில் விடப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.
இங்கிலாந்தின் இயோன் மோர்கன் அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இலங்கை ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இர்பான் பதானை யாருமே ஏலத்தில் எடுக்கவில்லை. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அடிப்படை விலை ரூ.2 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. ஒரு வழியாக புனே அணி பென் ஸ்டோக்சை ரூ.14.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. காலை 10 மணி வரையிலான நிலவரப்படி பென் ஸ்டோக்ஸ்தான் அதிக விலைக்கு ஏலம் போன வீரராகும்.
சிட்டி

No comments:
Write comments