சென்னை: மக்கள் மாற்றத்தை விரும்புவதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று அந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் மருதுகணேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், தேமுதிக சார்பில் மதிவாணன் போட்டியிடுகின்றனர்.எம்.ஜி.ஆர்-அம்மா பேரவை சார்பில் தீபா போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார். இதற்கிடையே தீபாவின் கணவர் மாதவனும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.இந்த நிலையில் ஆர்.கே.நகர் பாரதிய ஜனதா வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கங்கை அமரன் புதிய தலைமுறை டிவிக்கு அளித்த பேட்டியில், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்த பாஜக தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஆர்.கே.நகர் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன். மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார். சிட்டி
ஆர்கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக இசையமைப்பாளர் கங்கை அமரன் நிறுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கங்கை அமரன் சசிகலா குரூப்பிடம் பையனூர் பங்களாவை பறிகொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆர்கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. ஓபிஎஸ் தரப்பு அதிமுகவுக்கும் சசிகலா தரப்பு அதிமுகவுக்கும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை எடுத்துக்காட்டவுள்ள தேர்தல் என்பதால் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இந்த இடைத்தேர்தலில் களம் காணவுள்ள பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. சசிகலா அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன், ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக மதுசூதனன், திமுக வேட்பாளராக மருது கணேஷ், தேமுதிக வேட்பாளராக மதிவாணன், எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவையின் தீபா போட்டியிடுகின்றனர்..இந்நிலையில் பாஜக சார்பில் இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் நிறுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.இவர் சசிகலா குரூப்பிடம் தனது பண்ணை வீடான பையனூர் பங்களாவை பறிகொடுத்தவர் ஆவர். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தபோது, பங்களாவை விற்க யோசிக்காத தன்னை சசி குரூப் மிரட்டி எழுதி வாங்கியதாக கூறி பரபரப்பை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.சிட்டி
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதி அதிமுக கோட்டையாக இருந்து வந்தது.
ஆனால் அதிமுகவின் வாக்குகள் சசிகலா, ஓபிஎஸ், தீபா என 3 ஆக பிரிந்து கிடக்கிறது. இது எதிர்க்கட்சியான திமுகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
அதிமுக எதிர்ப்பு அலை
இத்தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட மறைந்த எஸ்.பி. சற்குணம் 2 முறை வெற்றி பெற்றிருக்கிறார். அந்த 2 முறையுமே கூட அதிமுக எதிர்ப்பு அலையால்தான் அவர் வெல்ல முடிந்தது. வாக்குகள்ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமான அளவுக்கு நாடார் சமூகத்தினர் வசிக்கின்றனர். இதுவும் எஸ்.பி. சற்குணத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக கூறலாம். இதனால்தான் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து எஸ்.பி. சற்குணத்தின் மருமகள் சிம்லா முத்துசோழனை களமிறக்கியது திமுக. ஆனால் அவர் தோல்வி அடைந்தார்.தமிழிசை போட்டி?தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில் நாடார் சமூகத்தின் வாக்குகளை குறிவைத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.கடந்த தேர்தலில்...
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அங்கு 19,167 வாக்குகளை மட்டுமே தமிழிசை சவுந்தராஜன் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சிட்டி
தமிழக உள்ளாட்சித் தேர்தல் மே 14-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை: தமிழகத்தில் வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவிட கோரி திமுக வழக்கு தொடுத்தது.
இதைத் தொடர்ந்து தேர்தலை ஒத்தி வைக்க பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சிப் பணிகளை கவனித்துக் கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் மே 15-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்திருந்தது.உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நூட்டி மோகனராவ், சுப்பிரமணியன் ஆகியோர் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது மே 14ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பிரதான வழக்கு விசாரணையை வரும் மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.தேர்தல் பணி தொடர்பான பயிற்சிகளை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டியதுள்ளது. அதனால், தேர்தல் வருகிற மே 15ம் தேதிக்குள் நடத்தப்படும்' என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். குறிப்பிட்ட ஒரு தேதியை சொல்ல வேண்டும் என்று நீதிபதிகள் வழியுறுத்திய நீதிபதிகள், மே 14ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்து உத்தரவிட்டது.இதனால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் தேதிகள் குறித்த அறிவிக்கைகள் ஏப்ரல் மாத மத்தியில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.சிட்டி