அமெரிக்காவில் பல் மருத்துவமனையில் பணி புரிந்த ஒரு இஸ்லாமிய பெண் பர்தா அணிந்து வேலைக்கு சென்றதால் மருத்துவமனை நிர்வாகம் அவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
அமெரிக்காவில் 'ஃபேர்பக்ஸ் டென்டல் கேர்' என்ற தனியார் பல் மருத்துவமனை ஃபேர்பக்ஸ் கவுன்டி மாகாணத்தில் இயங்கி வந்திருக்கிறது. இம்மருத்துவமனையில் வேலை கேட்டு சென்ற நஜாப் கான் என்ற பெண்ணிற்கு வேலை தருவதாக ஒப்புக்கொண்டு அவரை வேலைக்கு அமர்தப்பட்டார். வேலை கேட்டு சென்றபோதும் சரி, வேலை கிடைத்த பணிக்கு சென்ற முதல் இரண்டு நாட்களுக்கும் நஜாப் கான் பர்தா அணிந்திருக்கவில்லை.
இனி தான் தாரளமாக பர்தா அணிந்து செல்லலாம் என மூன்றாவது நாள் வேலைக்கு போக, அதனை கண்ட மருத்துவமனை நிர்வாகி டாக்டர் சுக்ஜூ பர்தா அணிந்து வந்த நஜாப் கானை பார்த்து இந்த ஆடையில் வந்தால் உங்களுக்கு இங்கே வேலை கிடையாது. வேலை வேண்டுமானால் பர்தாவை களைந்துவிடவேண்டும் என தெரிவித்திருக்கிறார். இதனால் நொந்துபோன அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டார்.
என்.பி.சி வாசிங்டன் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது ' நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னுடைய மத சுதந்திரத்தை பின்பற்றுவதற்கு கூட எனக்கு உரிமை வழங்கப்படவில்லை. நான் பர்தா அணிந்து வந்த ஒரே காரணத்திற்காகவே என்னை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். இது எனக்கு மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது' என தெரிவித்தார்.
ஏன் இவ்வாறு நடந்து கொள்ளப்பட்டது என டாக்டர் டுக்ஜூவை தொடர்பு கொண்டு கேட்டதற்கும் 'எங்களுடைய மருத்துவமனையில் மதச்சார்புடன் இல்லாம நடுநிலையை பேண வேண்டுமென்பதற்காகவே பர்தா அணிந்து வரக்கூடாது என தடைவிதித்தோம். இங்கே தொப்பி அணிய வேண்டுமென்றால் கூட நோயாளிகளின் பாதுகாப்பிற்காக அணியும் வகையான தொப்பியை மட்டுமே அணிய வேண்டும். எந்த மதத்தையும் குறிக்கும் உடைகளையோ, அடையாளங்களையோ அணிய அனுமதிப்பதில்லை. இது எங்கள் மருத்துவமனையின் கட்டுப்பாடுகள்' என தெரிவித்தார்.
அமெரிக்காவைச்சேர்ந்த இஸ்லாமிய கவுன்சில் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு குடிமகனும் தான் பின்பற்றுகின்ற மதச்சுதந்திரத்தை செயல்படுத்த உரிமை உண்டு. மதச்சுதந்திரத்தை பின்பற்றினார் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரை வேலையை விட்டு நீக்குவது அமெரிக்கச்சட்டத்திற்கு எதிரானது. எனவே நஜாப் கான் தான் சார்ந்திருக்கும் மத அடையாளங்களுடன் வேலை செய்ய மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால் இத்தகையை குறிகிய சிந்தனை கொண்ட மருத்துவர்கள் இருக்கும் இடத்தில் தான் வேலை செய்ய விரும்பவில்லை என நஜாப்கான் தெரிவித்துவிட்டார்.

Nalla nadipu. Vela ketu pogumbothu yen pardha podala?
ReplyDelete