பிரபல நடிகை நமீதா குடும்பத்தாருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தனது வேண்டுதலை நிறைவேற்றியதாக தெரிவித்தார்.
திருச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் யாரும் எதிர்பார்த்திராத வகையில் நடிகை நமீதா முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இதன் மூலம் அரசியலில் குதித்தார் நமீதா. இதனையடுத்து அதிமுகவின் தொண்டர்கள் பக்தி பரவசத்துடன் காணப்பட்டனர். தங்களுடைய கழகத்திற்கு இரண்டாவது அம்மா கிடைத்துவிட்டார் என்பது போல.
தேர்தல் பிரச்சாரத்திலும் களம் காணுவார் நமீதா என மிகவும் எதிர்பார்த்தனர், ஆனால் ஒழுங்காக தமிழ் பேசவும் வராது, வாறவென் போறவன் எல்லாத்தையும் "மச்சான்"னு கூப்பிட்டு மானத்த வாங்கிட கூடாதே என்னு பயந்துவிட்டார்களோ என்னவோ அதிமுகவின், நமீதாவை தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறக்கவே இல்லை. இதனால் அதிமுகவினருக்கு கொஞ்சம் சோகம்தான்.
தேர்தலுக்கு முன்பு அதிமுக வெல்லவேண்டும் என திருப்பதியில் வேண்டிக்கொண்டாராம். அதிமுக வெற்றிபெற்றதை அடுத்து குடும்பத்தாருடன் திருப்பதி கோயிலுக்கு சென்று தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். அம்மாவின் நலத்திட்டங்கள் மக்களுக்கு பிடித்திருக்கிறது அதனாலேயே மக்கள் அவரை மீண்டும் முதல்வராக ஆக்கிவிட்டார்கள் என்று அரசியலில் காலம்காலமாய் சேவை செய்த ஆராய்சியின் மூலம் இதனை கண்டுபிடித்திருக்கிறார் நமீதா.
நமீதா மேடம்! உங்களுக்கு அதிமுகவில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. இப்ப முதல்வராக இருக்கும் "அம்மா" இதற்கு முன்பு நடிகையாய் இருந்தவர்தான். அவரை அன்று நடிகையாய் பார்த்தவர்கள் இன்று "அம்மா"வாக பார்ப்பது போல இன்ரு உங்களை "நடிகை"யாக பார்ப்பவர்கள் நாளை உங்களையும் "அம்மா"வாக் பார்ப்பார்கள். அதற்கான தகுதிகள் உங்களிடம் கொட்டிக்கடக்கிறது. ஆல் தி பெஸ்ட்...!

No comments:
Write comments