Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Apr 28, 2016

தீபிகா குமாரி உலக சாதனை

ஷாங்காய்  - சீனாவின் ஷாங்காய்  நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலக கோப்பை தொடரின் தகுதிச்சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை தீபிகா குமாரி உலக சாதனையை சமன் செய்து சாதனை படைத்துள்ளார். சீனாவின் ஷாங்காய்  நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலக கோப்பை தொடரின் தகுதிச்சுற்றில் பங்கேற்று விளையாடிய இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, மொத்தம் 720 புள்ளிகளுக்கு 686 புள்ளிகள் பெற்றார்.

இதன் மூலம், கடந்த ஆண்டு குவங்ஜூ உலக பல்கலைக்கழகம் விளையாட்டுப் போட்டிகளின் போது தென் கொரியா வீராங்கனை கிபோபே நிகழ்த்திய உலக சாதனையை சமன் செய்துள்ளார். போட்டியின் இடைவெளியின்போது, உலக சாதனை முறியடிக்க தீபிகா குமாரிக்கு 343 புள்ளிகள் தேவைப்பட்டிருந்தது.

ஆனால், போட்டியின் முடிவில் தீபிகா குமாரி 342 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்து பெருமை சோ்த்தார்.  கடந்த 2014-ம் ஆண்டு போலந்து நாட்டில் நடந்த உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி தமைமையிலான இந்தியா பெண்கள் வில்வித்தை அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் மற்ற விளையாட்டுக்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இது போன்ற திறமையான வீராங்கனைகளை கண்டுகொல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic