Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Apr 28, 2016

"திமுகவினருக்கு மது ஆலைகளே கிடையாது" - ஐயா சாமி...!

தஞ்சாவூர் திலகர் திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து கருணாநிதி பேசியதாவது,

"திமுகவையும் எதிர்கட்சிகளையும் அடக்குவதிலேயே ஜெயலலிதா ஆர்வமாக உள்ளார். இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க தண்ணீரை விடவும் மலிவாக பணம் வாரி இறைக்கப்படுகிறது. தாங்களே வெற்றி பெற வேண்டும், தாங்களே ஆட்சியை பிடிக்க வேண்டும், தாங்களே கொள்ளையடிக்க வேண்டும் என்ற வகையில் ஒரு கூட்டம் நடமாடிக்கொண்டிருக்கிறது. நாட்டைப்பற்றிக் கவலைப்படாதவர்கள் கையில் ஆட்சி சிக்கிக்கொண்டுள்ளது.

தமிழர்களை காப்பாற்ற நம்மை விட்டால் வேறு கதியில்லை. நாம் தான் நம்மை காப்பாற்றிக்கொள்ளவேண்டும். அதனால் தியாகத்திற்கு தயாராகுங்கள், எதற்கும் தயார்
என்ற சபதத்தை எடுத்து பணியாற்றுங்கள். எதிரிகள் வெற்றி பெற்றுவிட்டால் பின்னர் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்ச் சமூகத்தை மீட்க முடியாது.

ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்கிறார். அது என்ன படிப்படியாக என்று புரியவில்லை. மதுக்கடைகளை திறந்தது கருணாநிதிதான் என்று ஜெயலலிதான் குற்றம் சாட்டுகிறார். 1971 மதுவிலக்கு ஒத்திவைக்கப்பட்டு தமிழ்நாட்டு கஜானாவுக்கு வருமானம் செலுத்தப்பட்டது. மீண்டும் 2 ஆண்டுகளிலேயே மதுக்கடைகளை மூடிய பெருமை எனக்கு உண்டு. ஆனால் அப்படி மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறந்து, அரசாங்கமே வியாபாரம் செய்த பெருமை ஜெயலலிதாவையே சாரும். இன்றும் ஜெயலலிதாவிற்கு சொந்தமான மது ஆலை உண்டு. அதில் விலை உயர்ந்த மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் திமுகவினர் யாருக்கும் மது ஆலைகளும் கிடையாது, மதுவியாபாரம் செய்ததும் கிடையாது" இவ்வாறு கருணாநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

சமீபத்தில் கருணாநிதியின் மகள் கனிமொழி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும் என்று தெரிவித்திருந்தார். தற்போது கருணாநிதி கூற்றை பார்க்கும்பொழுது மக்கள்தான் தான் இழிச்சவாயர்கள் என்று தெரிகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic