Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 20, 2016

எல்லாவற்றையும் இழந்து வீதிக்கு வந்த தேமுதிக‌



தமிழக சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த தேமுதிக கட்சி மாநிலக்கட்சி என்ற அந்தஸ்த்தை இழக்கவுள்ளதாகவும், அக்கட்சியினுடைய சின்னம் பறிக்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே அதிக பேச்சுக்குள்ளானவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த், காரணம் கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சியாக திகழ்ந்தது. பின்னர் அக்கூட்டணியை விட்டு விலகி அதிமுகவை சட்டமன்றத்திலும், வெளியிலும் கடுமையாக விமர்சித்து வந்தது.

இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்கிற பரபரப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் விஜயகாந்த் யார் கையிலும் பிடிபடாமல் நழுவிக்கொண்டே இருந்து தனியாக நிற்கப்போவதாகவும் அறிவித்தார். திமுக, அதிமுக பா.ஜ.க என அனைத்து கட்சிகளும் கோடிக்கணக்கில் விலைபேசி எப்படியாவது விஜயகாந்தை தன்னோடு சேர்த்துவிடவேண்டும் என்று முயற்சித்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக மக்கள் நலக்கூட்டணியில் ஐக்கியமானார். இதனால் கட்சிக்குள்ளையே பிளவு ஏற்பட்டு சந்திரகுமார் மற்றும் அவரோடு இருந்த ஆதரவாளர்கள் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டு மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை துவக்கி திமுகவோடு கூட்டு சேர்ந்தனர்.

இதனால் மக்களிடையே விஜயாகாந்திற்கு இருந்த செல்வாக்கு குறைந்தது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் நடந்து கொண்ட விதம், யாருக்கும் புரியாத பேச்சு போன்றவைகள் பிரச்சாரம் முழுக்க தொடர்ந்ததால் மிகப்பெரிய தோல்விக்கு ஆளானது தேமுதிக. மாநில அந்தஸ்து கொண்ட கட்சியாக இருக்க குறைந்தபட்சம் 6% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும், கடந்த தேர்தலில் 5% மட்டுமே பெற்றது, இருந்த போதிலும் 29 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்ததால் தேர்தல் ஆணையம் அதனை பெருசாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் தற்பொழுது ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாததாலும், பல தொகுதிகளில் டெபாசிட் இழந்ததாலும் மாநிலக்கட்சி என்ற அந்தஸ்த்தை இழக்கப்போவதாகவும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட முரசு சின்னமும் கைவிட்டு போகப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தேர்தலில் தோற்றதால் அக்கட்சியின் தொண்டர்கள் கலகலப்பை இழந்து நிற்கின்றனர். அவர்கள் எந்தளவிற்கு இனி வரும்காலங்களில் உத்வேகத்துடன் செயல்படுவார்கள் என்பது கேள்விக்குறிதான். ஆகையால் வரும் ஐந்தாண்டுகள் தேமுதிகவிற்கு கஷ்டகாலம்தான் என அரசியல் வள்ளுனர்கள் விமர்சித்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic