Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 20, 2016

ஐயய்யோ வட போச்சே...!



தமிழகத்தை திராவிட கட்சிகள் சீரழித்துவிட்டார்கள், தமிழகதிற்கு மாற்றம் தேவை அந்த மாற்றத்தையும் ஊழல் இல்லாத ஆட்சியையும் பா.ஜ.கவால் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூவி கூவி அழைத்தும், தலைகீழாக நின்று தண்ணியும் குடித்துபார்த்துவிட்டார்கள் ஆனால் மிஞ்சியது ஏமாற்றமே.

தமிழகத்தில் 3வது மிகப்பெரிய கட்சி பா.ஜ.கதான், நாங்கள் இந்த தேர்தலில் மிகப்பெரும் சக்தியாக மாறுவோம் என்றும் தமிழகத்தை திராவிட கட்சிகள் சீரழித்துவிட்டன என கருத்தை முன்வைத்து பா.ஜ.கவினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். மெனக்கட்டு மத்தியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, ராஜ்நாத் உட்பட பல மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

இதனால் பா.ஜ.கவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அக்கட்சியின் தேசிய செயலாளர் சென்னை தியாகராய நகரில் போட்டியிட்டு மூன்றாம் இடமே கிடைத்தது. ஆனால் 3வது இடம் கிடைத்ததே என்று பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டிய சமாச்சாரம் அல்ல அது காரணம் வாங்கிய ஓட்டுக்கள் வெறும் 4000 டெபாசிட் கூட பரிபோய்விட்டது. மேலும் அக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மற்றும் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் வாக்குகள் சற்று அதிகமாக பெற்றிருந்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் "வடபோச்சே" என்ற ரீதியிலேயே அக்கட்சியின் தொண்டர்கள் காணப்படுகிறார்கள்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic