தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெற இருக்கிறது. இதற்கான தயாரிப்புகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுறுகிறது. 6 மணிக்கு மேல் எவ்வித பிரச்சாரமும் நடைபெற அனுமதியில்லை என திட்டவட்டமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கு 3776 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 320 பேர் பெண்கள், 1566 சுயேட்சை வேட்பாளர்கள் அடங்குவர்.
இந்த தேர்தலில் 86.44% வாக்காளர்களுக்கு மட்டுமே பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே தெரிவித்தது போல புத் ஸ்லிப் கிடைக்காதவர்கள் 11 விதமான ஆவணங்களை காட்டி ஓட்டுப்போடலாம். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 100% வாக்குப்பதிவு நடைபெறவேண்டும் என்பதற்காக அனைத்து வழிவகைகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 66 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்திற்கும் அதிகமான இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. வாக்குச்சாவடிக்கு தேவையான அனைத்து பொருட்களும் உரிய பாதுகாப்போடு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நடைபெறும் அன்று மின்சாரம் தடைபடாமல் கவனமுடன் செயல்படுமாறு ச மின்சாரவாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு செல்போன் எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே 12ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் ரூபாய் 1 கோடியே 12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக ராஜேஷ் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் தகவல்படி வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இனி மக்கள் வாக்களிக்கத்தான் வரவேண்டும். நூறு சதவிகிதம் வாக்களிக்கப்பட்டால் மட்டுமே நல்லதொரு ஆட்சி அமையும் என்பது பலரின் கருத்தாகவும் உள்ளது.
தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுறுகிறது. 6 மணிக்கு மேல் எவ்வித பிரச்சாரமும் நடைபெற அனுமதியில்லை என திட்டவட்டமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கு 3776 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 320 பேர் பெண்கள், 1566 சுயேட்சை வேட்பாளர்கள் அடங்குவர்.
வாக்குப்பதிவு நடைபெறும் அன்று மின்சாரம் தடைபடாமல் கவனமுடன் செயல்படுமாறு ச மின்சாரவாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு செல்போன் எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே 12ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் ரூபாய் 1 கோடியே 12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக ராஜேஷ் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் தகவல்படி வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இனி மக்கள் வாக்களிக்கத்தான் வரவேண்டும். நூறு சதவிகிதம் வாக்களிக்கப்பட்டால் மட்டுமே நல்லதொரு ஆட்சி அமையும் என்பது பலரின் கருத்தாகவும் உள்ளது.

No comments:
Write comments