மேலும், ‘‘பிரதமரும், ஒரு டஜன் மத்திய மந்திரிகளும் கடந்த சிலநாட்களாக இங்கே முகாமிட்டிருக்கிறார்கள். தேவைப்பட்டால் மத்திய மந்திரிசபையே கேரளாவில் கூடும்’’ என அவர் சாடினார்.
பிரதமர் மோடி வெற்று வாக்குறுதிகளை கூறி, கேரளாவை ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இடதுசாரி கட்சிகள் பற்றி ஏ.கே.அந்தோணி குறிப்பிடுகையில், ‘‘மேலும் 5 ஆண்டுகள் அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமரவேண்டியது வரும்’’ என்று கூறினார். ‘‘கேரளாவை மேலும் 5 ஆண்டுகள் ஆளுகிற வாய்ப்பு காங்கிரஸ் கூட்டணிக்கு வழங்கினால், நாங்கள் மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், கல்வியில் முன்னேற்றம் காண்பதற்கும், நாட்டில் முதல் மாநிலமாக கேரளா உயர்வதற்கும் உழைப்போம்’’ என்றும் ஏ.கே.அந்தோணி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments