சாதாரண நாட்களிலேயே அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவது வாடிக்கை. தேர்தல் காலத்தில் சொல்லவா வேண்டும், ஒவ்வொரு அரசியல்வாதிகளும் மற்றவர்களை குற்றஞ்சாட்டுவதும், விமர்சிப்பதும், விமர்சனத்திற்கு பதில் கொடுப்பது என்கிற ரீதியில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தலைவர்கள் வரம்பு மீறியும், அநாகரீக முறையிலும் பேசி வருகின்றனர். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் இ.வி.கே.எஸ் ஒரு ஸ்பெஷல். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குறிய விமர்சனங்களை செய்து வருகிறார். அந்த வகையில் ஜெயலலிதா தொடர்பாக அவர் பேசிய விபரம் வருமாறு...
கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, 'தி.மு.க. - காங்கிரஸ் ஊழல் கூட்டணி, ஓட்டு கேட்டு வரும்போது விரட்டி அடியுங்கள்" என்று ஆணவத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கொக்கரித்திருக்கிறார்.
தமது சுற்றுப்பயணத்தில் காசு கொடுத்து வலுக்கட்டாயமாக கூட்டி வரப்பட்ட கூட்டத்தைத் தவிர ஒட்டுமொத்த தமிழ் மக்கள் அனைவரும் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை புறக்கணித்து வருகிறார்கள். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வாய்க்கு வந்தபடி வசைமாறி பொழிந்து வருகிறார். அவரது குற்றச்சாட்டைப் பார்க்கிறபோது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதுபோல இருக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, 'தி.மு.க. - காங்கிரஸ் ஊழல் கூட்டணி, ஓட்டு கேட்டு வரும்போது விரட்டி அடியுங்கள்" என்று ஆணவத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கொக்கரித்திருக்கிறார்.

No comments:
Write comments