வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. திருப்பதி, திருமலை தேவஸ்தானத்தில் விரிவாக்கப்பிரிவு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் நரேந்திர ரெட்டி, இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. இதைதொடர்ந்து கடந்த 4 நாட்களாக அவரது வீடு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
May 2, 2016
திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் வங்கி கணக்கு முடக்கம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Write comments