Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 11, 2016

பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு

வரையறுக்கப்பட்ட கடல் எல்லையை மீறி பாகிஸ்தான் கடற்பரப்புக்குள் நுழைந்ததாக கூறி 10 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மற்றும் குஜராத் கடல் எல்லை அருகே உள்ள சர்கிரீக் என்ற இடத்தில் வைத்து மீனவர்களை கைது செய்ததாக அந்நாட்டு கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கடற்பரப்புக்குள் நுழைந்ததும் திரும்பிச்செல்லுமாரு கேட்டுக்கொண்டும் மீனவர்கள் திரும்பிச்செல்லாததால் கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மீனவர்களின் படகுகள் இரண்டையும்  பாகிஸ்தான் பறிமுதல் செய்தது.  இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுவதும் அவர்களை இருநாட்டு கடற்படையினரும் கைது செய்வதும் வாடிக்கையான ஒன்றாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 59 இந்திய மீனவர்களை கைது செய்த பாகிஸ்தான் அவர்களின் 10 படகுகளையும் பறிமுதல் செய்தது.  அதேவேளையில், அவ்வப்போது, நல்லெண்ண அடிப்படையில் மீனவர்கள் விடுவிக்கவும் படுகிறார்கள். இருப்பினும்,  கராச்சி சிறையில் 300 இந்திய மீனவர்கள் வாடுவதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic