கே.சி பழனிச்சாமியின் மகன் வீட்டில் 1 1/2 கோடி ரூபாய் ரொக்கப்பணம் வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.சி. பழனிச்சாமி, இவர் தனக்கு சொந்தமான தங்கும் விடுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கிவைத்திருக்கிறார் என ரகசிய தகவல் வருமான வரித்துறைக்கு கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதன் அடிப்படையில் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது மகன் சிவராம வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூபாய் 1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்திற்கு உரிய கணக்கு, ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பரிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ரூபாய் 10 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரூரில் உள்ள அவரது லாட்ஜில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கே.சி.பழனிசாமியின் மகன் சிவராமன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்படிருந்தனவா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. தேர்தலும் இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகட்தில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் பல கோடி ரூபாய் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பற்க்கும் படையினர் திவிரவாக கண்காணித்து வருவதால் இன்னும் பல கோடி ரூபாய் சிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.சி. பழனிச்சாமி, இவர் தனக்கு சொந்தமான தங்கும் விடுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கிவைத்திருக்கிறார் என ரகசிய தகவல் வருமான வரித்துறைக்கு கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
கரூரில் உள்ள அவரது லாட்ஜில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கே.சி.பழனிசாமியின் மகன் சிவராமன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்படிருந்தனவா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. தேர்தலும் இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகட்தில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் பல கோடி ரூபாய் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பற்க்கும் படையினர் திவிரவாக கண்காணித்து வருவதால் இன்னும் பல கோடி ரூபாய் சிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Write comments