Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 11, 2016

மல்லையாவை நாடு கடத்த முடியாது - இங்கிலாந்து திட்டவட்ட அறிவிப்பு

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டு பணத்தை திருப்பிச்செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பிச்சென்றால் பிரபல தொழிலதிபரும் கிங்பிஷர் நிருவணத்தில் அதிபர் விஜய் மல்லையா. இதனையடுத்து அவரது பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியது. இங்கிலாந்தில் உள்ள அவரை அமலாக்கத்துறையினரின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.


இதனை தொடர்ந்து அவரை கைது செய்ய மும்பை நீதிமன்றம் வாரண்ட் பிறபித்துள்ளது. இங்கிலாந்தில்  தஞ்சம் அடைந்துள்ள மல்லையா மீது பண மோசடி தடுப்புச்சட்டத்தில் கீழ் விசாரணை நடந்து வருகிறது. எனவே அவரை அங்கிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என கோரி டெல்லியிலுள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. இதனை கேள்விப்பட்ட மல்லையா தான் ஏற்கனவே கட்டாய நாடுகடத்தலுக்கு ஆளாகியிருப்பதாகவும் ஒருபோதும் தான் இந்தியா திருப்பப்போவதில்லை எனவும் தெரிவிதுள்ளார்.

அதே சம்யத்தில் விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது எனவும் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க தயார் என்றும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சம்கம் தெரிவித்துள்ளது. கோடிக்கணக்கில் ஊழல் செய்துவிட்டோ அல்லது கடன் வைத்துவிட்டோ வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும் தொழில் அதிபர்களை திரும்ப இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு  இதற்கு முன்பும் லலித் மோடி விஷயத்தில் தோல்வியே அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic