Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 9, 2016

பா.ஜ.கவை புரட்டி எடுக்கும் ஆம் ஆத்மி

அமித்ஷா வெளியிட்ட பிரதமர் மோடியின் கல்விச்சான்றிதழ் போலியானது என மீண்டும் பா.ஜ.கவை நோண்டி நொங்கெடுத்திருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆசுதோஷ்.

பிரதமர் நரேந்திர மோடி பெற்ற கல்லூரி பட்டங்கள் குறித்து டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு டெல்லி பல்கலைகழகம் அளித்த பி.ஏ பட்டம் மற்றும் குஜராத் பல்கலைகழகம் அளித்த எம்.ஏ பட்டத்துக்கான சான்றிதழை இன்று காலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பா.ஜ.கவின் தேசிய தலைவர் அமித்ஷா பகிரங்கமாக வெளியிட்டார்.


ஆனால் இதில் திருப்தி அடையாத ஆம் ஆத்மி, சான்றிதழின் நகல்கள் தங்களுக்கு கிடைத்தமாத்திரத்தில் தனது செய்தி தொடர்பாளர் ஆசுதோஷ் மூலம்  பத்திரிகையாளர்களை கூட்டி அமித்ஷா வெளியிட்ட பிரதமர் மோடியின் கல்விச்சான்றிதழ் போலியானது என குண்டை தூக்கிப்போட்டார். அந்த சந்திப்பில் அவர் கூறியதாவது,

பா.ஜ.க தலைவர்கள் வெளியிட்ட பி.ஏ மற்றும் எம்.ஏ சன்றிதழில் பெயர் வித்தியாசம் உள்ளது. ஒன்றில் நரேந்திர குமார் தாமோதர்தாஸ் என்றும் மற்றொன்றில் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர் மாற்றியிருந்தால் அதற்கான் ஆதாரத்தை பா.ஜ.க வெளியிட வேண்டும். பி.ஏ டிகிரி  மதிப்பெண் பட்டியலில் 1977 என்றும் பட்டச் சான்றிதழில் 1978 என்றும் முரண்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. பா.ஜ.க பொய்யான சான்றிதழ்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இதனால் மீண்டும் பா.ஜ.கவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic